/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியை பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை
/
பயணியை பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை
பயணியை பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை
பயணியை பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை
ADDED : ஆக 31, 2024 02:02 AM

வால்பாறை;கைக்குழந்தையுடன் அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணை பாதிவழியில் இறக்கி விட்ட சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது நல்லமுடி எஸ்டேட். இங்கிருந்து அரை கி.மீ., தொலைவில் ஹைபாரஸ்ட் எஸ்டேட் உள்ளது. வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நாள் தோறும் ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு பஸ் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நல்லமுடியிலிருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் ரோடு கரடு, முரடாக உள்ளதால், அரசு பஸ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் வால்பாறையிலிருந்து ைஹபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு இரவு, 8:00 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
பஸ்சில் ைஹபாரஸ்ட் எஸ்டேட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் கைகுழந்தையுடன் பயணம் செய்த நிலையில், அவரை நல்லமுடி எஸ்டேட் பகுதியில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் இறக்கி விட்டனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில், கைக்குழந்தையுடன் தனியாக நடந்து சென்றார்.
பயணியை பாதியில் இறக்கிவிட்டது குறித்து, ைஹபாரஸ்ட் எஸ்டேட் தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் அருணகிரி பாண்டி தலைமையில், அப்பகுதி தொழிலாளர்கள் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தாசில்தார் சிவக்குமார், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் விநாயகம், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையின் முடிவில், கைக்குழந்தையுடன் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணியை பாதியில் இறக்கிவிட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்றும், கரடு, முரடான ரோட்டை தற்காலிமாக சீரமைத்து, அரசு பஸ்சை ைஹபாரஸ்ட் வரை இயக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.