/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு இயந்திரத்தில் பொருத்தும் 'பேலட் ஷீட்' கோவைக்கு வந்தாச்சு!
/
மின்னணு இயந்திரத்தில் பொருத்தும் 'பேலட் ஷீட்' கோவைக்கு வந்தாச்சு!
மின்னணு இயந்திரத்தில் பொருத்தும் 'பேலட் ஷீட்' கோவைக்கு வந்தாச்சு!
மின்னணு இயந்திரத்தில் பொருத்தும் 'பேலட் ஷீட்' கோவைக்கு வந்தாச்சு!
ADDED : ஏப் 07, 2024 01:15 AM

கோவை:கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இவற்றில் பொருத்துவதற்கு, வேட்பாளர்களின் பெயர், போட்டோ, சின்னத்துடன் கூடிய 'பேலட் ஷீட்' சென்னையில் அச்சடிக்கப்பட்டது. அவை இரும்பு தகர பெட்டியில் வைத்து சீலிடப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு தருவிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக பெட்டியின் 'சீல்' உடைக்கப்பட்டு, 'பேலட் ஷீட்' சரிபார்க்கப்பட்டது. வேட்பாளர்களின் பெயர், போட்டோ மற்றும் சின்னங்கள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வு செய்து, கட்சியினரிடம் காட்டப்பட்டது. அவர்களிடம் ஒப்புதல் பெற்றதும், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் 'பேலட் ஷீட்'டுகள் ஒப்படைக்கப்பட்டன. பின், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கான 'ஸ்ட்ராங் ரூமில்' இருப்பு வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.
வரும், 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசியல் கட்சியினர் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'பேலட் ஷீட்'டுகள் பொருத்தப்படும். இன்னொரு நாளில், இயந்திரத்தில் உள்ள ஒவ்வொரு பட்டனும் சரியாக இயங்குகிறதா என, 1,000 ஓட்டுகள் பதிவிட்டு சரிபார்த்து, பின்னர் அழிக்கப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

