/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபாய நிலையில் மரங்கள்: அச்சத்தில் அன்னுார் மக்கள்
/
அபாய நிலையில் மரங்கள்: அச்சத்தில் அன்னுார் மக்கள்
ADDED : மே 10, 2024 01:45 AM

அன்னுார்;அன்னுார் ஓதிமலை சாலையில், பனை மரங்கள் விழும் அபாய நிலையில் உள்ளன.
அன்னுார், ஓதிமலை சாலையில், ஓதிமலை, சிறுமுகை, உள்ளிட்ட பல ஊர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு குளத்தின் கிழக்கு கரையை ஒட்டி உள்ள இரண்டு பனை மரங்கள் ஓதிமலை சாலையை நோக்கி சிறிது சிறிதாக சாய்ந்து வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையில் மரம் மேலும் சாய்ந்து எந்த நேரத்திலும் ஓதிமலை சாலையில் விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த வழித்தடத்தில் மன்னீஸ்வரர் கோவில், பெரிய அம்மன் கோவில் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஆகியவை உள்ளன.
ஏராளமான மக்கள் இந்த பாதையில் செல்கின்றனர். அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. 'உடனடியாக மாநில நெடுஞ்சாலை துறையினர் அபாய நிலையில் உள்ள அந்த இரு மரங்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்து பெரும் விபரீதம் நடக்கும் அபாயம் உள்ளது,' என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.