/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு
/
வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு
வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு
வாக்காளர் பெயர் நீக்கத்தால் கோவை மக்கள் ஆவேசம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையீடு
ADDED : ஏப் 26, 2024 01:57 AM

கோவை:கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6,124 வாக்காளர்கள் இருப்பதாக, பட்டியல் வெளியிடப்பட்டது. இம்முறை ஓட்டுப்பதிவு செய்ய சென்ற வாக்காளர்களில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
இதை கண்டித்தும், ஓட்டுரிமை மறுக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் ஜூன் 4க்குள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், 'பப்ளிக் பார் அண்ணாமலை' என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், 'என் ஓட்டு என் உரிமை' என்ற தலைப்பில், கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த அமைப்பை சேர்ந்த சுதர்சன் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு அன்றே, பலரது ஓட்டுரிமை நீக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
''வேண்டுமென்றே, திட்டமிட்டு, சதி செய்துள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில், ஒரு பூத்தில் மட்டும், 830 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 2026 சட்டசபை தேர்தலிலும் இதுபோன்ற செயல்படக் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் போராட்டம் நடத்துகிறோம்,'' என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் பேசியதாவது:
கோவையில் பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கினாலும் ஓட்டுப்போட மாட்டர் என தெரிந்து, வாக்காளர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர். ஒரு லட்சம் ஓட்டுகள் காணோம் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியது உண்மை.
மொத்தம், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பூத்தில் இருந்தும், 20 முதல், 50 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பா.ஜ.,வுக்கு தொடர்ந்து ஓட்டளிக்கக் கூடியவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

