/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க' கேட்டு 'பிராங்க்' செய்தவர் கைது!
/
'ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க' கேட்டு 'பிராங்க்' செய்தவர் கைது!
'ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க' கேட்டு 'பிராங்க்' செய்தவர் கைது!
'ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க' கேட்டு 'பிராங்க்' செய்தவர் கைது!
ADDED : ஜூலை 04, 2024 05:15 AM
போத்தனூர் : 'பிராங்க்' செய்த அரசு பஸ் கண்டக்டரை, போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் அடுத்து சுகுணாபுரம் கிழக்கு, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசாருதீன், 25- கடந்த, 1ம் தேதி இரவு இவர் தனது நண்பருடன், தனது வீட்டிற்கு அடுத்துள்ள ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்தார்.
அவ்வழியே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், இவர்கள் அருகே வந்து பைக்கை நிறுத்தி, ஏன் இங்கு உட்காந்துள்ளீர்கள், என கேட்டுள்ளார். அசாருதீன், நீங்கள் யார் அதனை கேட்க, என கேட்டபோது, நான் போலீஸ், என கூறியுள்ளார் அந்த நபர்.
இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சப்தம் கேட்டு அசாருதீனின் தந்தை அங்கு வந்தார். அதற்குள்ளாக, அசாருதீன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது அசாருதீனின் தந்தை, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் அதே பகுதியில் வசிக்கும் அரசு பஸ் கண்டக்டர் சிவகுமார், 35 என கண்டுகொண்டார்.
அந்நபரும் தனது ஹெல்மெட்டை கழற்றி, என்ன பயந்துட்டீங்களா, சும்மா விளையாட்டுக்கு பிராங்க் செய்தேன், என அசாருதீனிடம் கூறியுள்ளார். இதனிடையே தகவல் கிடைத்து, அங்கு வந்த குனியமுத்தூர் போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
அறிமுகமில்லா நபர்களிடம் சென்று பேசி, பலவித சேட்டையில் ஈடுபடும் யூ டியூபர்களை போல, பிராங்க் செய்ய முயன்று, போலீசாரின் பிடியில் சிக்கிய சிவகுமார், தற்போது என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கியுள்ளார்.