/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறியாளர்களின் பங்கு ராணுவத்தில் அவசியம்
/
பொறியாளர்களின் பங்கு ராணுவத்தில் அவசியம்
ADDED : மே 24, 2024 11:10 PM
கோவை : கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின் தேசிய மாணவர் படை சார்பில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டு மக்களுக்கு அளித்து வரும் பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
நம் தேசத்திற்கு முப்படைகள் ஆற்றும் சேவைகள் குறித்து, சிறப்பு விருந்தினர் ஊட்டி வெலிங்டனில் செயல்படும் இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ் பேசுகையில், ''முப்படைகளில் பொறியாளர்களின் பங்களிப்பு மிக அவசியமானது. அதற்கான தகுதிகளை மாணவர்கள் வளர்த்துக்கொண்டு, நமது ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக, தங்களது பொறியியல் அறிவினை பயன்படுத்தி பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, உடல்தகுதி தேர்வு, திறனாய்வுத்தேர்வு, போட்டித்தேர்வு பற்றிய மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து, முப்படைகளில் மாணவர்கள் சேர்வதற்கு தங்களை தயார் செய்து கொள்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்.
கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்து, முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

