/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாண்டு வாத்தியம் இசைக்க சீர்வரிசையுடன் ஆசிரியர்களை வரவேற்ற பள்ளி மாணவியர்
/
பாண்டு வாத்தியம் இசைக்க சீர்வரிசையுடன் ஆசிரியர்களை வரவேற்ற பள்ளி மாணவியர்
பாண்டு வாத்தியம் இசைக்க சீர்வரிசையுடன் ஆசிரியர்களை வரவேற்ற பள்ளி மாணவியர்
பாண்டு வாத்தியம் இசைக்க சீர்வரிசையுடன் ஆசிரியர்களை வரவேற்ற பள்ளி மாணவியர்
ADDED : செப் 05, 2024 11:49 PM

கோவை:ஆசிரியர் தினமான நேற்று புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவியர் சீர்வரிசை தட்டுகளுடன், பூரண கும்பம் ஏந்திஆசிரியர்களை கொண்டாடியது நெகிழ்ச்சியை தந்தது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி. தந்தையானவர் தனது குழந்தைக்கு போதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒரு திறன்வாய்ந்த குருவிடம் ஒப்படைக்கின்றார். அந்த குருவானவர் மாணவனை ஞானத்தின் வாயிலாக நல்வழிப்படுத்துகிறார்.
இப்படி மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஏணிப்படிகளாக இருக்கும் ஆசிரியர்களை ஆண்டுதோறும் செப்., 5ம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். நேற்று ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றல் என பல்வேறு வழிகளில் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சற்று வித்தியாசமாக தாய் வீட்டு சீதனத்துடன் வந்த மாணவியர், பாண்டு வாத்தியம் இசைத்து ஆசிரியர்களை சீர்வரிசை தட்டுகளுடன் வரவேற்றது காண்போரை நெகிழச்செய்தது.
பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கொண்டாட்டத்தில், மாணவியர் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி, வேட்டி சட்டை அணிந்து, வளையல், மஞ்சள், கும்பம், வாழைத்தார் உள்ளிட்ட சீர்வரிசையுடன்மாணவியர் வரிசைகட்டி நின்று, பள்ளி முதல்வர் கரோலின் விக்டோரியா மற்றும் ஆசிரியர்களை வளாகத்தில் இருந்து வகுப்பறைகளுக்கு அழைத்துசென்றனர்.
பள்ளி ஆசிரியர் லதாவிடம் கேட்டபோது,'கோ கிரீன் ஸ்டே கூல்' என்பதை மையமாக கொண்டு இவ்விழாவை கொண்டாடுகிறோம். தாய் வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டுவந்து எங்களை மாணவியர் வரவேற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.