/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானையை பார்த்த அதிர்ச்சியில் பாதுகாவலர் பலி
/
காட்டு யானையை பார்த்த அதிர்ச்சியில் பாதுகாவலர் பலி
காட்டு யானையை பார்த்த அதிர்ச்சியில் பாதுகாவலர் பலி
காட்டு யானையை பார்த்த அதிர்ச்சியில் பாதுகாவலர் பலி
ADDED : மே 24, 2024 03:56 AM

வடவள்ளி : கோவையில், மருதமலை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியை ஒட்டி, பாரதியார் பல்கலை அமைந்துள்ளது. இதனால், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்டவை, பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் அவ்வப்போது நுழைகின்றன.
இந்நிலையில், பாரதியார் பல்கலை வளாகத்தின் பின்புறம் உள்ள புதிய கட்டடத்தின் அருகில் நேற்று காலை, ஒற்றை காட்டு யானை வந்தது. அப்போது, பணியில் இருந்த பாரதியார் பல்கலை., காவலாளிகள் சண்முகம், 57, சுரேஷ்குமார், 57, ஆகியோர் காட்டு யானையை திடீரென பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, அங்குள்ள பள்ளத்தில் இருவரும் தவறி விழுந்து காயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தார். சுரேஷ்குமார் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, பாரதியார் பல்கலை வளாகத்திற்குள், நேற்று காலை, 11:00 மணிக்கு வந்த ஒற்றைக்காட்டு யானை, பல்கலை., வளாகத்தின் பின்புறம் உள்ள முள் காட்டில் முகாமிட்டது. காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் மாலை வரை ஈடுபட்டனர்.