/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைக்குள் படம் எடுத்து ஆடிய பாம்பு
/
ரேஷன் கடைக்குள் படம் எடுத்து ஆடிய பாம்பு
ADDED : ஆக 12, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;வால்பாறை அடுத்துள்ளது வெள்ளமலை எஸ்டேட் மட்டம். இங்குள்ள ரேஷன் கடையில் மாதம் தோறும் தொழிலாளர்களுக்கு, அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் ரேஷன் கடையை திறக்க விற்பனையாளர் சென்றுள்ளார். கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்குள்ள டயர் ஒன்றில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு படம் எடுத்து ஆடியது. இதைக்கண்ட ரேஷன் கடை ஊழியர்கள் அலறியடித்து வெளியே வந்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள், பாம்பை லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

