/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் தேங்கும் நீரை அகற்றணும்
/
அரசு மருத்துவமனையில் தேங்கும் நீரை அகற்றணும்
ADDED : மே 26, 2024 12:18 AM
கோவை : கோவை அரசு மருத்துவமனையில், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி விடுகிறது.
அதனை உடனுக்குடன் பம்பு வாயிலாக அகற்றி வருகின்றனர். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல மழை பெய்யும் போது, கோவை அரசு மருத்துவமனை நுழைவாயில் முன் பகுதியிலும், பழைய எலும்பு முறிவு வார்டு பகுதியிலும், மழைநீர் தேங்கி விடுகிறது.
இதனை உடனே அகற்றாததால், துர்நாற்றம் வீச துவங்குகிறது. அதில் கொசு, புழுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் அகற்றி, நோய் தொற்று தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.