/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்குடை அமைக்க கடைகளை அகற்றிய நகரமைப்பு பிரிவினர்
/
நிழற்குடை அமைக்க கடைகளை அகற்றிய நகரமைப்பு பிரிவினர்
நிழற்குடை அமைக்க கடைகளை அகற்றிய நகரமைப்பு பிரிவினர்
நிழற்குடை அமைக்க கடைகளை அகற்றிய நகரமைப்பு பிரிவினர்
ADDED : மே 10, 2024 01:33 AM
கோவை:மேட்டுப்பாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே நிழற்குடை அமைத்து, பஸ்கள் நின்று செல்ல ஏதுவாக நான்கு கடைகளை, நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னுார், கூடலுார், கோத்தகிரி செல்லும் பஸ்கள், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்வதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் ஸ்டாண்ட் எதிரே காந்திபுரத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்ல ஏதுவாக நிழற்குடை அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு, இடத்தை ஆய்வு செய்தனர்.
இந்த இடத்தில் இரு பஸ்கள் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கென, அங்கு அனுமதியின்றி செயல்படும் கடைகளை அகற்றுமாறு நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ரோட்டை ஆக்கிரமித்திருந்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடைகள் உட்பட நான்கு கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
சிலர் தாமாகவே முன்வந்து பெட்டிக்கடை உள்ளிட்டவற்றை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.