/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்; சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
/
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்; சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்; சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
ஆள் இறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்; சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
ADDED : ஏப் 23, 2024 02:24 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் வெளியேறியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு வணிக நிறுவனங்கள் அதிகளவு நிறைந்த பகுதியாக இருப்பதுடன், வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, அவ்வப்போது கழிவுநீர் வெளியேறி ரோட்டிலும், அருகில் உள்ள சாக்கடை கால்வாயிலும் வழிந்தோடுகிறது. இந்நிலையில் நேற்று பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து அதிகளவு கழிவுநீர் வழிந்தோடி, கால்வாய் நிறைந்ததால் கடும் துர்நாற்றம் வீசியது.
ரோட்டிலும் கழிவுநீர் சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அந்த வார்டு கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின், பணியாளர்கள், அந்த குழியில் இருந்து கழிவுநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர்.
மேலும், குழியை தோண்டி பார்த்த போது, குழாய் சேதமடைந்து இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேதமடைந்த குழாய்க்கு மாற்றாக புதிய குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிரந்தர தீர்வு தேவை
மக்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, அவ்வப்போது கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடைகள் முன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், மக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் தீர்வு காணவில்லை. அவ்வப்போது தற்காலிக தீர்வாக கழிவுநீரை வெளியேற்றி செல்வது வாடிக்கையாகயுள்ளது.
இந்த பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், சில கடைக்காரர்கள் விடுமுறை விட்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது. அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

