/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞரின் 'காதை கடித்தார்' ; ரகசியம் சொல்வதற்காக அல்ல!
/
இளைஞரின் 'காதை கடித்தார்' ; ரகசியம் சொல்வதற்காக அல்ல!
இளைஞரின் 'காதை கடித்தார்' ; ரகசியம் சொல்வதற்காக அல்ல!
இளைஞரின் 'காதை கடித்தார்' ; ரகசியம் சொல்வதற்காக அல்ல!
ADDED : ஆக 22, 2024 12:47 AM
கோவை : சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஷேக் சல்மான், 21. இவர் கடந்த, 20ம் தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு சாய்பாபா காலனி, கருணாநிதி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ராஜஸ்தானை சேர்ந்த சாந்த், 27, குல்சான் குமார், 30, சனாஜ், 30 ஆகிய மூவர் தகறாறில் ஈடுபட்டிருந்தனர்.
ேஷக் சல்மான் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.
அவரிடம் வாக்குவாதம் செய்த அவர்கள், கட்டையால் தாக்கினர்.
வலியில் கத்திய சல்மானின் சத்தம் கேட்டு, அவரது நண்பர்கள் சஞ்சய் குமார், முத்துராஜா ஆகியோர் வந்தனர்.
அவர்களையும் வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.
இதனிடையே சஞ்சய் குமாரின் காதை சனாஜ் கடித்தார். வலது காது அறுபட்டது.
காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி போலீசார், வடமாநில இளைஞர்கள் மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.