/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
ADDED : ஏப் 15, 2024 10:55 PM
கோடை விடுமுறை துவங்கவுள்ளது. லீவ் என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி
அத்லெட்டிக்ஸ் அண்ட் கோ-கோ, ஷட்டில் அண்ட் பேட்மிண்டன், செஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், கேரம், த்ரோபால், ஹேண்ட்பால் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: கோவைப்புதூர். தொடர்புக்கு: 96553- 45402, 99431- 98832.
குளோபல் ஆர்ட்
பன் அண்ட் ஆர்ட் கிரியேட்டிவிட்டி தொடர்பான 20 வகுப்புகள், டிராயிங், கலரிங் ஆகிய பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.}5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. முகவரி: வடவள்ளி. தொடர்புக்கு: 96553 -57673.
டிசா- தி ஐ.சி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி
இலவசமாக கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாலை 5:00 முதல் 6:30 மணி வரை நடக்கிறது. முகவரி: டிசா மைதானம், அல்லிக்காரன்பாளையம், அன்னூர். தொடர்புக்கு: 96002- 06161.
பேரா அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ்
சிலம்பம், கராத்தே ஆகிய பயிற்சிகள் இலவசமாக, 10 நாட்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 3 வயது முதல் வயது வரம்பில்லை. முகவரி: இக்கரை போளுவாம்பட்டி. தொடர்புக்கு: 90420- 69993.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

