/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை
/
மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை
ADDED : செப் 02, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மேயர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், மண்டல அளவிலான துறை ரீதியான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (செப்., 3) நடக்கிறது. அக்கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
அதன் காரணமாக, மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.