/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை திருக்கல்யாண உற்சவம்
/
ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஆக 06, 2024 06:21 AM
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி, கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நாளை 7ம் தேதி காலை, 6:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், மாலை, 6:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூரத்தையொட்டி நாளை காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன.காலை, 10:00 மணிக்கு நாச்சியார் திருப்பாவை மற்றும் திருப்பாவை சேவித்தல் மற்றும் மாலை, 5:00 மணிக்கு ரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை மஹாஅருள் நிஹூம்பலாயாகம் மற்றும் ஆடிப்பூர விழா நடக்கிறது.காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 9:00 மணிக்கு மகாலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, காலை, 10:30 மணிக்கு ேஹாமம், நிஹூம்பலாயாகமும் (வரமிளகாய் யாகம்) நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிேஷக ஆராதனையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடக்கிறது. யாக பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள், பூஜை பொருட்களை இன்று (6ம் தேதி) மாலைக்கு கோவிலில் வழங்கலாம்.
* உடுமலை, குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிபூர சிறப்பு வழிபாடு நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. மாலையில் நிறைவு பெற்றது. நாளை காலை ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவமும், மாலையில், கும்மியாட்டமும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருவீதியுலா நடக்கிறது- நிருபர் குழு -.