sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார்த்திக் ராஜா கற்றுக்கொண்டது இதுதான்!

/

கார்த்திக் ராஜா கற்றுக்கொண்டது இதுதான்!

கார்த்திக் ராஜா கற்றுக்கொண்டது இதுதான்!

கார்த்திக் ராஜா கற்றுக்கொண்டது இதுதான்!


ADDED : ஜூன் 22, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கவிதைகள் சொல்லவா... உன் பெயர் சொல்லவா... இரண்டுமே ஒன்று தான் ஹோ... ஹோ...'

-- இந்த பாடலை கேட்கும் போது, படத்தின் பெயருக்கு ஏற்ப, நிச்சயம் உள்ளம் கொள்ளை போகும். உல்லாசம் படத்தில், 'வீசும் காற்றுக்கு' பாடலை மெய் மறந்து கேட்டால், மயில் இறகால் வருடி விட்டு போன உணர்வு தென்படும். 'காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது...' கொஞ்சம் இறங்கி அடித்த பாடல்.

இசைஞானியின் அற்புத இசையும், தம்பி யுவனின் துள்ளலான இசையும், கார்த்திக் ராஜாவுக்குள் அடங்கியிருக்கிறது.

இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக, கோவை வந்த கார்த்திக் ராஜாவை சந்தித்தோம்.

இவ்வளவு வருடங்கள் கழித்தும், தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அவரிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

முதலில் நான் அப்பாவிடம் கற்றுக் கொண்டது ஒழுக்கம். ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை, காலை 7:00 மணிக்கு ஸ்டுடியோவுக்கு சென்று விடுவார் அவர். இசை கோர்ப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. பின்னாளில் தான் அவரிடம் இருந்த இசை தாகம் என்னுள் வந்தது. 40 வருடங்களுக்கு மேலாகியும், அவர் இசையமைத்து கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி.

நீங்கள் இசையமைத்த பாடல் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால், உங்களுக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? ஏன் இந்த தொய்வு?

இதை தொய்வு என்று சொல்ல முடியாது. நான் இசையமைத்த பல பாடல்களை, பல இடங்களில் கச்சேரிகள் நடத்தும் போது, ரசிகர்கள் இன்னும் அதை கேட்டு, பாடச் சொல்கின்றனர். சினிமாவுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல், இடையில் விளம்பரப் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பாதையில் தொடர்ந்து பயணித்து தான் கொண்டிருக்கிறேன். தற்போது, இரண்டு படங்களுக்கு இசையமைக்க, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது, இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப பாடல் கொடுக்கிறார்களா? இல்லை, இளைஞர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று பாடல் கொடுக்கிறார்களா?

கால மாற்றத்துக்கு ஏற்ப, இசையும் மாறிக் கொண்டு தான் வருகிறது. இதை மாற்ற முடியாது. இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றால் அதில் தவறில்லை. எல்லோருக்கும் ஒரு ரசனை உண்டு. இப்போதிருக்கும் இசை இனியும் தொடரலாம். தொடராமலும் போகலாம். ஆனால், மருந்து என்று ஒன்று தேவைப்படுமானால், அது பழங்கால இசை தான்.

சமீபகாலமாக, இசைஞானி இளையராஜாவை சுற்றி சர்ச்சைகள் உருவாகி வருகிறது? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட, மொழியா, இசையா என்ற ஒரு சர்ச்சை வந்தது.

சில நாட்கள் கழித்து, இசைஞானியே அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சர்ச்சை உருவான சமயத்தில், நான் சிம்பொனிக்கு இசையமைத்து விட்டேன் என்றார் இசைஞானி. அந்தளவுக்கு இசையில் மூழ்கி விட்டார் அவர்.






      Dinamalar
      Follow us