/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாளத்தில் இரும்பு திருடிய மூவருக்கு சிறை
/
தண்டவாளத்தில் இரும்பு திருடிய மூவருக்கு சிறை
ADDED : மார் 03, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை அருகேயுள்ள பெ.நா.பாளையம்- காரமடை ரயில்வே தண்டவாளத்தில், 144 இரும்பு கம்பிகள் திருட்டு போனது. மேட்டுப்பாளையம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்டதாக ராஜா, மாயாண்டி, முத்துமணி, ஆனந்தகுமார், கார்த்தி, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆனந்தகுமார், கார்த்தி, சுரேஷ் ஆகியோருக்கு தலா, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.