/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்
/
ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 01:32 AM
கோவை;இன்று மாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியிலும், 6:30 மணிக்கு கோவையிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பேசுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில், டில்லியிலிருந்து முதல் தலைவராக, தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக, பிரசாரம் மேற்கொள்ள ராகுல் இன்று வருகிறார். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள பெல் பள்ளிக்கூட மைதானத்தில் இன்று மாலை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகிறார். அதில் பங்கேற்று விட்டு, மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோவை பொதுக்கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில் பேசுகின்றனர்.
கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று மாலை, 6:00 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அதற்காக கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோடு செட்டிப்பாளையம் அருகே உள்ள மைதானத்தில் பொது கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொது கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு கோவை வருகிறார்.
அங்கிருந்து சாலைமார்க்கமாக பொது கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு ஸ்டாலினும், காங்., முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.
கோவையில் நடக்கும் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து மாநகர போலீசார், 1000 பேரும் புறநகர் போலீசார், 2000 பேரும் என, 3000 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

