/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 23, 2025 02:50 AM

ஆன்மிக சொற்பொழிவு
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், வாராந்திர சத்சங்கம் கடந்த 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று, ஆத்ம வித்யாலயத்தில், மாலை, 5:30 மணி முதல், 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
அமிர்தானந்தமயி தரிசனம்
மாதா அமிர்தானந்தமயி இன்று கோவை கணபதி, நல்லாம்பாளையம், ராமசாமி நகரில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில், காலை, 7:30 மணி முதல், ராகு தோஷ நிவாரண பூஜையும், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல், அம்மாவின் சங்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடக்கிறது.
பகவத்கீதை
நம்பிக்கையே உலகின் சக்திவாய்ந்த விஷயம் என்றும் எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என பகவத்கீதை போதிக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதியில், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில், 'பகவத்கீதை' சொற்பொழிவு மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது
சுந்தரகாண்டம்
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவுகள் மற்றும் நாமசங்கீர்த்தனங்கள் நடந்து வருகிறது. இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, சுந்தரகாண்டம் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நடக்கிறது.
தீபம் ஏற்றும் நிகழ்வு
அன்னுார், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் சத்திய ஞான சபையில், சத்திய ஞானசபை தீபம் ஏற்றும் நிகழ்வு நடக்கிறது. காலை, 4:00 முதல் 9:00 மணி வரை, திருவருட்பா அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல், சத்திய ஞான தீபம் ஏற்றுதல் நடக்கிறது. மதியம், 1:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது.
மக்கள் ஒற்றுமை விழா
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், மக்கள் ஒற்றுமை விழா மாலை, 6:00 மணி முதல் நடக்கிறது. அன்னுார், சத்தி ரோடு, அம்பாள் பெட்ரோல் பங்க் எதிரில் நடக்கும் விழாவில், பறையாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.
குவிஸ் போட்டி
பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், 22வது குவிஸ் போட்டி இன்று நடக்கிறது. கல்லுாரியின், ஜி.ஆர்.டி., கலையரங்கத்தில், காலை, 9:30 மணி முதல் போட்டிகள் நடக்கிறது. குவிஸ் மாஸ்டர் ரங்கராஜன் போட்டியை வழி நடத்துகிறார்.
கல்வி விழா
ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின், 'கற்கை நன்றே - கல்வி விழா' இன்று, குரும்பபாளையம், ஆனந்த சைதன்யா தியானமையத்தில் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் நடக்கும் விழாவில், கற்கை நன்றே சாதனையாளர் விருது, கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், மாணவர்களின் கருத்து பகிர்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
ஸ்மார்ட் ரன்
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் ஸ்மார்ட் சிட்டி சார்பில், சிறப்பு குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களிடையே, மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் ரன்' நடக்கிறது. அவிநாசி ரோடு, வ.உ.சி., மைதானத்தில் காலை, 8:45 முதல் 11:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
இலக்கியச் சந்திப்பு
கோவை வாசகசாலை மற்றும் கோவை மாவட்ட மைய நுாலகம் இணைந்து, 45வது இலக்கியச் சந்திப்பை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம், கோவை மாவட்ட மைய நுாலகத்தில், மாலை, 4:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'களிற்றடி' சிறுகதை தொகுப்பு குறித்த கலந்துரையாடல் நடக்கிறது.
ஆரோக்கிய விழிப்புணர்வு
கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், ஆரோக்கிய விழிப்புணர்வுக் கூட்டம், அவிநாசி ரோடு, அண்ணா சிலை எதிரே, டி.கே.பி.சேம்பரில் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க முன்னாள் செயலர் அன்பு சிவம் சிறப்புரையாற்றுகிறார்.
கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, ஆர்.எஸ்.புரம், பிஷப் உபகாரம் உயர்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை கலந்துகொள்ளலாம்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.