/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 08, 2025 06:48 AM

அரங்கநாதர் தேர்த்திருவிழா
காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், மாசிமகத் திருத்தேர் பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. விழாவில் இன்று, இரவு, 8:30 மணிக்கு, அனுமந்தவாகன உற்சவம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
சரவணம்பட்டி, கரட்டுமேடு, மருதாசலக்கடவுள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, விமானக்கலசம் நிறுவுதல், அடியார்கள் வழிபாடு, நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்வி, மூலவர்க்கு எண் வகை மருந்து சாற்றுதல் ஆகியவை நடக்கிறது.
தேர்த்திருவிழா
மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவிலில், 16ம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு, 8:00 மணிக்கு கன்னிமார் பூஜை நடக்கிறது.
பக்தி இன்னிசை
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. இன்று நடக்கும் நிகழ்வில், மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை, பக்தி இன்னிசை நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பி.ஆர்.ஜே.,ஆர்த்தோ சென்டர் மற்றும் மேக் மருத்துவமனை, டிரினிட்டி கண் மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. மேட்டுப்பாளையம் ரோடு, பி.ஆர்.கே., ஆர்த்தோ சென்டர் மற்றும் மேக் மருத்துவமனை வளாகத்தில், காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை முகாம் நடக்கிறது.
ஊக்குவிக்கும் போட்டிகள்
தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், பார்வை மாற்றுத்திறனாளி பெண்களுக்கான சர்வதேச மகளிர் தின விழா காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. வரதராஜபுரம், தேசிய பார்வையற்றோர் இணைய வளாகத்தில் நடக்கும் விழாவில், பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடத்தி, பரிசு வழங்கப்படுகிறது.
பட்டமளிப்பு விழா
பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், 19வது பட்டமளிப்பு விழா காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. எல்.டி.ஐ., மைண்ட் ட்ரீ ஆர்க்கிள் பயிற்சி நிர்வாக துணைத் தலைவர் நியூயின் துரை, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
நுால் வெளியீடு
முத்தமிழ்ச்சங்கம் வெள்ளலுார் சார்பில், வெள்ளலுார் வாசி யோக மையத்தில் காலை, 10:00 மணிக்கு நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில், எழுத்தாளர் தமிழ்நிலா சண்முகதேவி எழுதிய, 'பாரதி வரியும் பாவையர் வாழ்வும்' நுால் வெளியிடப்படுகிறது.
கைத்தறி கண்காட்சி, விற்பனை
ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி தெரு, சாஸ்திரி மைதானத்தில், 'காட்டன் பேப்' எனும் தலைப்பில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 120 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
உறுப்பு தான விழிப்புணர்வு
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், தேசிய சேவைத் திட்டம் மற்றும் ரோட்டராக்ட் கிளப், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உடன் இணைந்து, உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 11:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
விழிப்புணர்வு ஓட்டம்
ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நெடுந்துர ஓட்டம் நடக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தி, காலை, 8:30 மணிக்கு, நவக்கரை முதல் க.க.சாவடி வரை நடக்கிறது.
மகளிர் தின விழா
* வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லுாரி, கோவைப்புதுார் காலை, 10:30 மணி.
* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் மதியம், 2:00 மணி.
* கவுமார மடாலய வளாகம், சின்னவேடம்பட்டி காலை, 10:30 மணி. ஏற்பாடு: கவுமார மடாலயம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைவாணி கல்வி நிறுவனங்கள்.
* செயின்ட் பால்ஸ் பள்ளி மைதானத்தில், கே.என்.ஜி., புதுார் பிரிவு, தடாகம் மெயின் ரோடு காலை, 10:00 மணி. ஏற்பாடு: செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனம்.
* ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு காலை, 9:00 மணி. ஏற்பாடு: தினமலர்.
* டாக்டர் ஆர்.வி.,கலை அறிவியல் கல்லுாரி, காரமடை காலை, 10:30 மணி.
* சுகுணா பொறியியல் கல்லுாரி, நேரு நகர், காளப்பட்டி ரோடு மதியம், 2:00 மணி.
* கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் மதியம், 3:00 மணி.