/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி, கத்திரி நாற்றுகள்
/
தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி, கத்திரி நாற்றுகள்
தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி, கத்திரி நாற்றுகள்
தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி, கத்திரி நாற்றுகள்
ADDED : ஜூலை 02, 2024 02:37 AM
சூலுார்;தக்காளி, கத்திரி, மிளகாய், எலுமிச்சை நாற்றுகள், மானிய விலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு அறிக்கை:
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், பயிர் பரப்பு விரிவாக்க திட்டத்தில், தக்காளி, கத்திரி, மிளகாய், எலுமிச்சை, மாஞ்செடிகள், பப்பாளி மற்றும் செண்டுமல்லி நாற்றுகள், 100 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், நிலப்போர்வை அமைத்தல், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு பட்டறை, சிப்பம் கட்டும் அறை கட்டுதல், நிழல் வலை கூடாரம் அமைத்தல், மண்புழு உர படுக்கை அமைத்தல், தேனீ பெட்டி, தேன் எடுக்கும் இயந்திரம் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஆதார், ரேஷன் அட்டை நகல், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்கள் தேவை. tn.horticulture.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம். 0422 - 2990014 என்ற எண்ணில் சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.