/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிப்பு

ADDED : ஜூலை 17, 2024 01:49 AM

வால்பாறை;கேரள மாநிலம், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுள்ளதால், சுற்றுலா பயணியர் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை வனப்பகுதி, தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ளது. வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கும் அதிக அளவில் செல்கின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக பெய்கிறது. இதனால், சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுலா பயணியர் இங்கு செல்ல கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், இருமாநில சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேரள வனத்துறையினர் கூறுகையில், 'தமிழக - கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி, அதிரப்பள்ளி, சார்பா நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.