/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் சுற்றுலா வேன் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
மீண்டும் சுற்றுலா வேன் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
மீண்டும் சுற்றுலா வேன் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
மீண்டும் சுற்றுலா வேன் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 14, 2024 03:18 PM
வால்பாறை:
'ஒன் டே' சுற்றுலா திட்டத்தின் கீழ், வால்பாறைக்கு சுற்றுலா வேன் மீண்டும் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையின் இயற்கை அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணியரை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், கோவை தமிழ்நாடு ஒட்டலில் இருந்து அழைத்து வந்தனர். அங்கிருந்து, காலை, 7:00 மணிக்கு, 15 பேர் பயணம் செய்யும் வகையில் சுற்றுலா வேன் இயக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக சுற்றுலா வேன் இயக்கப்படாததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர். மீண்டும் சுற்றுலா வேன் இயக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறைக்கு 'ஒன் டே' சுற்றுலாத் திட்டத்தின் கீழ், குறைந்த கட்டணத்தில் கோவையிலிருந்து, பொள்ளாச்சி, ஆழியாறு, கவியருவி வழியாக வால்பாறை வரை சுற்றுலாவேன் இயக்கப்பட்டது.
வால்பாறையிலிருந்து, அக்காமலை பாலாஜிகோவில், கூழாங்கல்ஆறு, நல்லமுடி காட்சிமுனை, சோலையாறுஅணை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்பட்டனர்.
மழை காரணமாக, தற்போது 'புக்கிங்' மிக குறைவாக உள்ளதால், வேன் தொடர்ந்து இயக்க முடியாத நிலை உள்ளது. சீசன் காலத்தில் மட்டுமே சுற்றுலா வேன் இயக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.