/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 'பொக்லைன்' உதவியுடன் மீட்பு
/
பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 'பொக்லைன்' உதவியுடன் மீட்பு
பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 'பொக்லைன்' உதவியுடன் மீட்பு
பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் 'பொக்லைன்' உதவியுடன் மீட்பு
ADDED : மே 28, 2024 11:34 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அன்சாரி வீதியில், கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் குழியில் சிக்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அன்சாரி வீதி வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ரோட்டில் நேற்று கற்கள் ஏற்றி வந்த டிராக்டர், ரோட்டோரம் இருந்த குழியில் இறங்கியது.
டிராக்டரின் சக்கரம் முழுவதுமாக குழியில் இறங்கி ஒரு புறம் சாய்ந்த நிலையில் நின்றது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, டிராக்டரில் இருந்த கற்களை இறக்கி, எடையை குறைத்ததும், 'பொக்லைன்' உதவியுடன் டிராக்டர் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'நகரப்பகுதியில் உள்ள முக்கிய ரோடுகள், தெருக்களில் உள்ள ரோடுகளும் மோசமாக உள்ளதால், வாகனங்கள் சிக்கி கொள்வது; நடந்து செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை தொடர்கிறது.
ரோட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் வீண் அசம்பாவிதங்களை தடுக்க முடியும்,' என்றனர்.