ADDED : ஜூலை 01, 2024 12:36 AM
கிணத்துக்கடவு;தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில், பொள்ளாச்சி வழியாக வாரம் இருமுறை இயக்க வேண்டும் என, பயணியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வாரம் இருமுறை ரயில் சேவையை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து, கடந்த மார்ச், 15ம் தேதி அறிவித்தது.
இதனால், ரயில் பயணியர் பலர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த ரயில் தற்போது வரை பயணியர் பயன்பாட்டிற்கு வராததால், பயணியர் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த ரயில் சேவை துவங்கினால், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் மற்றும் மதுரை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயணம் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும், என, ரயில் பயணியர் சங்கம் மற்றும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.