/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்புக்கூட்டிய உணவுபொருள் தயாரிப்பதற்கு பயிற்சி எதிர்பார்ப்பு
/
மதிப்புக்கூட்டிய உணவுபொருள் தயாரிப்பதற்கு பயிற்சி எதிர்பார்ப்பு
மதிப்புக்கூட்டிய உணவுபொருள் தயாரிப்பதற்கு பயிற்சி எதிர்பார்ப்பு
மதிப்புக்கூட்டிய உணவுபொருள் தயாரிப்பதற்கு பயிற்சி எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 12, 2024 10:12 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், படித்த கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இறைச்சியில் மதிப்பு கூட்டிய உணவு பொருட்களின் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்க, அரசு முன்வர வேணடும்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை மற்றும் கோழி பண்ணையாளர்கள் லாபத்தை அதிகரிக்க, இறைச்சி மற்றும் இறைச்சி பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். சிலர், இறைச்சி கட்லெட், ஊறுகாய், சூப் என, கோழி இறைச்சியை மதிப்புக்கூட்டிய உணவுபொருட்களாக மாற்றி, நேரடி விற்பனையிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், படித்த கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இறைச்சியில் மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள் தயாரிப்பு குறித்து, பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும் என,கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
படித்த கிராமப்புற இளைஞர்கள் பலர், புதிதாக தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், கோழி இறைச்சி வாயிலாக, நீட்ஸ் பாத ஆயில் மருந்து, பதப்படுத்தப்பட்ட மற்றும் வேகவைத்த சிக்கன், சிக்கன் குழலப்பம் என, மதிப்பு கூட்டிய உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்து வழிகாட்டுதல்கள் அளிக்க வேண்டும்.
இதற்கு, அரசு சார்ந்த துறைகளின் வாயிலாக பயிற்சி அளிக்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள், சுயமாக தொழில் துவங்கும்போது, பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

