/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, நீலகிரி கோர்ட் உட்பட 105 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்!
/
கோவை, நீலகிரி கோர்ட் உட்பட 105 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்!
கோவை, நீலகிரி கோர்ட் உட்பட 105 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்!
கோவை, நீலகிரி கோர்ட் உட்பட 105 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்!
ADDED : மே 09, 2024 04:24 AM

கோவை, நீலகிரி கோர்ட் உட்பட, 105 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக நீதித்துறையில், ஒரே இடத்தில் மூன்றாண்டுக்கு மேல் பணியாற்றும் நீதிபதிகள் ஆண்டு தோறும் மே மாதத்தில் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு, சிவில் நீதிபதிகள், 105 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்,கோவை, நீலகிரி, திருப்பூரில் மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
நீலகிரி மாவட்டம், ஊட்டி மாவட்ட முன்சிப் கோர்ட் நீதிபதி சரவண செந்தில்குமார், மதுரை,ஜே.எம்:2, கோர்ட்டிற்கும், மேட்டுப்பாளையம் முன்சிப் கோர்ட் நீதிபதி தமிழரசி, மேட்டுப்பாளையம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், திருப்பூர் கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி கார்த்திகேயன், பழநி முன்சிப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி பாரதிராஜன், பொள்ளாச்சி முதன்மை முன்சிப் கோர்ட்டிற்கும், பொள்ளாச்சி முதன்மை மாவட்ட முன்சிப் ஆனந்தி, திண்டுக்கல், ஜே.எம்:3, கோர்ட்டிற்கும், கோவை,ஜே.எம்:2, மாஜிஸ்திரேட் செந்தில் ராஜா, திருப்பூர், ஜே.எம்:1, கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி சுபஸ்ரீ, திருப்பூர் கூடுதல் முன்சிப் கோர்ட்டிற்கும், மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் பிரகாஷ், மேட்டுப்பாளையம் மாவட்ட முன்சிப் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர். வால்பாறை மாஜிஸ்திரேட் செந்தில்குமார், திருவெண்ணை நல்லுார் மாஜிஸ்திரேட்டாக மாற்றப்பட்டனர்.
- நமது நிருபர் -