ADDED : ஆக 30, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வேடபட்டி பிரிவு அலுவலகம் செப்., 2ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
10/59 டி, பேரூர் ரோடு, வேடபட்டியில் செயல்பட்டு வந்த, வேடபட்டி பிரிவு உதவி மின்பொறியாளர் அலுவலகம், செப்., 2ம் தேதி முதல், எண்.432/2, கதவு எண் 2, பெருமாள் நாயுடு லே-அவுட், வேடபட்டி என்ற முகவரியில் செயல்படும். இத்தகவலை, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.