/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 10, 2024 10:35 PM

மேட்டுப்பாளைம்;காரமடை - தோலம்பாளையம் சாலையில் மழையினால், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் லேசாக மற்றும் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் தோலம்பாளையம் - காரமடை சாலையில், தெப்பக்குளம் அருகே மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக காரமடை போலீசார் மற்றும் பொதுமக்கள் மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.