/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவும் துாத்துக்குடி ரயில்
/
கோவையில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவும் துாத்துக்குடி ரயில்
கோவையில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவும் துாத்துக்குடி ரயில்
கோவையில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவும் துாத்துக்குடி ரயில்
ADDED : ஆக 06, 2024 05:56 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் சேவை, கோவையில் உள்ள சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து, கடந்த ஜூலை 19ம் தேதி தூத்துக்குடிக்கு ரயில் சேவை புதிதாக துவங்கப்பட்டது. இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை வழியாக ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பயணிகள் மற்றும் தொழில்துறையினர் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 3,500க்கும் மேற்பட்ட பம்புசெட் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் பம்பு செட்டுகள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பம்புசெட் நிறுவனங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களில் 40 சதவீதம் பேர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது மேட்டுப்பாளையம் -- தூத்துக்குடி ரயில் சேவையால் இனி பம்புசெட் மற்றும் உதிரிபாகங்களை ரயிலில் அனுப்பலாம். இதனால் நேரமும், பணமும் மிச்சமாகும். அதே போல், தென்மாவட்ட தொழிலாளர்களும் தங்களது ஊர்களுக்கு சென்று வர இந்த ரயில் மிகவும் வசதியாக இருக்கும். இதனால் பம்புசெட் நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
கோவையில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஆட்டோமொபைல், பம்புசெட், டெக்ஸ்டைல்ஸ் உள்பட பல்வேறு துறைகளில் ஜாப் ஆடர்கள் பெற்று தொழில் புரிந்து வருகின்றனர். தொழிலாளர்களில் பலரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயிலை தினசரி இயக்கினால் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சிறு,குறுந் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த ரயில் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.