/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
/
கூலி தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 12:39 AM
போத்தனூர்: வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள மகாலிங்கபுரம், ராமசாமி வீதியை சேர்ந்தவர் குணசேகரன், 29; கூலி தொழிலாளி. கடந்த, 5ம் தேதி கோணவாய்க்கால்பாளையம், டாஸ்மாக் பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த ஒருவர் இவரை தண்ணீர் பாட்டில் வாங்கி வர கூறியுள்ளார். குணசேகரன் மறுத்ததால், உடனிருந்த மற்றொருவர் அவரை திட்டி, கீழே தள்ளிவிட்டார், தொடர்ந்து இருவரும் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கினர்.
தலையில் காயமடைந்தவரை அருகிலிருந்தோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
குணசேகரன் புகாரில், போத்தனூர் போலீசார் விசாரித்து, வெள்ளலூர் தியாகி கக்கன் நகரை சேர்ந்த ராம்குமார்,27, முனுசாமி, 41 ஆகியோரை கைது செய்தனர்.
அதுபோல் முனுசாமி புகாரில் குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.