ADDED : செப் 04, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை, கருமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் லிபின். இவரது தாயார் இந்திராதேவி டீ கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், 9ம் தேதி சொந்த ஊரான கரூர் சென்று, 30ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் சுவற்றை உடைத்து, மர்ம நபர்கள் 'டிவி'யை திருடி சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், 'டிவி'யை திருடி, விற்க முயன்ற, வால்பாறை அண்ணாநகரை சேர்ந்த விஜயகுமார், 22, கருமலையை சேர்ந்த மாரிசெல்வம்,24, ஆகியோரை கைது செய்தனர்.