/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம தங்கல் திட்டத்தில் இரு மாதங்கள் களப்பணி
/
கிராம தங்கல் திட்டத்தில் இரு மாதங்கள் களப்பணி
ADDED : மே 16, 2024 06:16 AM
கிணத்துக்கடவு : தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கிணத்துக்கடவு முள்ளுப்பாடியில், கிராம தங்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், தேனி வேளாண் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில், இரண்டு மாத காலம் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், முள்ளுப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விவசாயிகளுக்கு, பயிர் சாகுபடி ஆலோசனை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதில், விவசாயத்தில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாயம், உரம் தயாரித்தல், ஒருங்கிணைந்த வேளாண்மை செய்தல், மாட்டு தீவனம் தயாரித்தல், மண் புழு உரம் பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.