/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேலும் இரண்டு உழவர் சந்தை; தயாராகிறது சாத்தியக்கூறு அறிக்கை
/
மேலும் இரண்டு உழவர் சந்தை; தயாராகிறது சாத்தியக்கூறு அறிக்கை
மேலும் இரண்டு உழவர் சந்தை; தயாராகிறது சாத்தியக்கூறு அறிக்கை
மேலும் இரண்டு உழவர் சந்தை; தயாராகிறது சாத்தியக்கூறு அறிக்கை
ADDED : மார் 09, 2025 11:52 PM
கோவை; கோவையில் மேலும், இரண்டு இடங்களில் உழவர் சந்தை அமைப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், குறிச்சி, சுந்தராபுரம், சூலுார், வடவள்ளி ஆகிய எட்டு இடங்களில், உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.
எட்டு சந்தைகளிலும் சேர்த்து, 634 பேர் கடைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 180 டன் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் மீனாம்பிகை கூறுகையில், ''விதிமுறைகளின் படி, ஒரு சந்தைக்கும் மற்றொரு சந்தைக்கும் இடையில் 40 கி.மீ., தொலைவு இருக்க வேண்டும்.
''குனியமுத்துார் மற்றும் துடியலுார் பகுதிகளில், உழவர் சந்தை அமைப்பது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சாத்தியக்கூறு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது,'' என்றார்.