/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி அருகே சுத்தமில்லை குப்பை கொட்டி எரிப்பு
/
பள்ளி அருகே சுத்தமில்லை குப்பை கொட்டி எரிப்பு
ADDED : ஏப் 18, 2024 04:50 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, குப்பை எரிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு, கடந்த சில நாட்களாக, சிலர் அரசு பள்ளி பின்பக்கத்தில் குப்பை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால், பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து விடுகிறது. அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதில், அதிகமாக பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, குப்பை கொட்டி எரிக்க ஊரின் எல்லையில் மாற்று இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

