/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்றப்படாத கழிவால் கீரணத்தம் முழுவதும் நாற்றம்! எவ்வளவு புகார் அளித்தாலும் 'பம்மாத்து' போடுது பஞ்சாயத்து
/
அகற்றப்படாத கழிவால் கீரணத்தம் முழுவதும் நாற்றம்! எவ்வளவு புகார் அளித்தாலும் 'பம்மாத்து' போடுது பஞ்சாயத்து
அகற்றப்படாத கழிவால் கீரணத்தம் முழுவதும் நாற்றம்! எவ்வளவு புகார் அளித்தாலும் 'பம்மாத்து' போடுது பஞ்சாயத்து
அகற்றப்படாத கழிவால் கீரணத்தம் முழுவதும் நாற்றம்! எவ்வளவு புகார் அளித்தாலும் 'பம்மாத்து' போடுது பஞ்சாயத்து
ADDED : செப் 03, 2024 01:41 AM

நிரம்பி வழியும் சாக்கடை
தெலுங்குபாளையம் பிரிவு, கலைஞர் நகரில் சரிவர சுத்தம் செய்யாததால், சாக்கடை கால்வாய் நிரம்பி வழிகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சீரான இடைவெளியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- கிருஷ்ணன், கலைஞர்நகர்.
புதரை அகற்றணும்
உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி பூங்காவின் பல பகுதிகளில், புதர் மண்டி காணப்படுகிறது. நடைபாதைகள், இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள், கூரைகளை சுற்றி மிகவும் அடர்த்தியாக புதர் வளர்ந்துள்ளது. புதரை அகற்றி, பூங்காவைசுத்தம் செய்ய வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
குழாய் உடைப்பு
ஒண்டிப்புதுார், சூர்யா நகர், இரண்டாவது வீதி விரிவாக்கத்தில், பாதாள சாக்கடை பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து விட்டது. 15 நாட்களுக்கு மேலாகியும் உடைப்பை சரிசெய்யவில்லை. பெருமளவு தண்ணீர் வீணாவதால், விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- நாராயணன், ஒண்டிப்புதுார்.
பூங்கா தொட்டியில் தண்ணீரில்லை
சேரன்மாநகர் கடைசி பேருந்து நிறுத்தம் அருகே, சிறுவர் பூங்காவில் குடிநீர் தொட்டி உள்ளது. இருப்பினும், தொட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, தண்ணீர் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சக்திவேல்,
சேரன்மாநகர்.
கடும் துர்நாற்றம்
கீரணத்தம் பஞ்சாயத்தில், சாலையோரம் மலை போல குப்பை குவிந்துள்ளது. இரவு நேரத்தில் இப்பகுதியில் குப்பை கொட்டுவதால், மினி குப்பை கிடங்காக உருவாகி வருகிறது. அவ்வழியே கடந்து செல்ல முடியாத அளவிற்கு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
- மங்கையர்க்கரசி, கீரணத்தம்.
பள்ளங்களை சீரமைக்கணும்
ரேஸ்கோர்ஸ், 83வது வார்டு, அப்பாசாமி கல்லுாரி ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பல இடங்களில் உள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- பாலகிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ்.
இரவில் நிறையும் குப்பை
ஆவாரம்பாளையம், 28வது வார்டு, சோபா நகர், அரசுப்பள்ளி பின்புறம், சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. இரவு நேரங்களில் வந்து, சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர்.குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
- ரமேஷ், சோபா நகர்.
உடைந்த சிலாப்
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், சக்தி நிறுவனம் எதிரில் சிலாப் உடைந்துள்ளது. வாக்கிங் செல்பவர்கள், குழந்தைகள் தவறி விழுகின்றனர். உடைந்த சிலாப்பை சரிசெய்ய வேண்டும்.
- யுவராஜ், திருமகள்நகர்.
பழுதான விளக்கு
கிழக்கு மண்டலம், 25வது வார்டு, 'எஸ்பி -20, பி -34' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரவில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் பாதிப்படைகின்றனர். பழுதான விளக்கை விரைந்துசரிசெய்ய வேண்டும்.
- ஹேமா, 25வது வார்டு.
டெங்கு நோய் அபாயம்
சரவணம்பட்டி, வரதையங்கார்பாளையம், அண்ணாமை நகர், கால்வாயில் பெருமளவு பிளாஸ்டிக் கழிவு குவிந்துள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- சுதா, சரவணம்பட்டி.
தார் சாலை வேண்டும்
மாநகராட்சி 99வது வார்டில், நுாலகம் செல்லும் வழியில் மண் சாலை முழுவதும் பள்ளமாக உள்ளது. மழைநீர் தேங்கும் போது சேறும், சகதியுமாகமாறிவிடுகிறது. நடக்கவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளதால், விரைந்து தார் சாலை அமைக்க வேண்டும்.
- மனோகரன், போத்தனுார்.
இருளால் பாதுகாப்பில்லை
வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, அம்பேத்கர் நகரில், 'எஸ்.பி -20 பி-3' என்ற எண் கொண்ட கம்பத்தில், பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்லவே, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- விமலா, வெள்ளக்கிணறு.