/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட வலியுறுத்தல்
/
ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2024 09:51 PM
உடுமலை : உடுமலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பேரவை கூட்டம் நடந்தது. தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, இ.கம்யூ., துளசிமணி, மாவட்ட செயலாளர் இசாக், தாலுகா செயலாளர் சவுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையிலுள்ள, ஆனைமலையாறு நல்லாறு அணைகளை கட்டவும், பிரதான கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களை புதுப்பிக்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல், நில அளவீடு செய்வதில், பணம் பறிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
தென்னை விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், கொப்பரைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு, ரூ. 150 நிர்ணயித்து, தென்னை மரங்களுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
உடுமலை அருகே, ஜம்புக்கல் மலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, 1970ல், ஏழை விவசாயிகளக்கு அரசு வழங்கிய கண்டிசன் பட்டாக்களை, தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். விவசாயிகளையும், அரசையும் ஏமாற்றி போலி ஆவணங்கள் வாயிலாக கிரையம், நீண்ட கால குத்தகை என்ற பெயரில் நடந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர்களாக சுந்தரராஜ், முத்துச்சாமி, செயலாளராக தட்சணாமூர்த்தி, பொருளாளராக தம்பிராஜ், துணை செயலாளர்களாக, நடராஜ், சுந்தர்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.