/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த குடியிருப்பு சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமடைந்த குடியிருப்பு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 05:44 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டியில் சேதமடைந்த குடியிருப்புகளை புதுப்பிக்க வேண்டும், என த.வெ. க., சார்பில் சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆழியாறு புளியங்கண்டியில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 25 ஆண்டுகளுக்கு முன், 41 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது அந்த குடியிருப்புகள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழக்ககூடிய நிலையில் உள்ளது.
இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. எனவே, ஆய்வு செய்து உடனடியாக புதுப்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

