/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு
/
விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு
ADDED : ஆக 18, 2024 12:07 AM

கோவை;விளைச்சல் அதிகரிப்பால், கோவையில் காய்கறி விலை குறைந்துள்ளது.
கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு, ஊட்டி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்துார் மற்றும் ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கேரட் மற்றும் பட்டாணி தவிர, மற்ற அனைத்து காய்கறி விலையும் குறைந்துள்ளது. கோவை வெளி மார்க்கெட்டில், சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி 20 ரூபாய்க்கும், ஊட்டி உருளைக்கிழங்கு 90 ரூபாய்க்கும், பெங்களூரு உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முள்ளங்கி கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கேரட் மற்றும் பட்டாணி விலை, முன்பை விட அதிகரித்துள்ளது. கேரட் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், பட்டாணி ஒரு கிலோ 350 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற மாவட்டங்களை போல, கோவையில் தொடர்ச்சியாக கனமழை பெய்யவில்லை. மிதமான மழைதான் பெய்துள்ளது. அதனால் காய்கறி விளைச்சலுக்கு பாதிப்பு இல்லை. விளைச்சலும் அதிகரித்துள்ளது. மழை நின்று, பனிக்காலம் துவங்க இருப்பதால், காய்கறி விளைச்சல் மேலும் அதிகரித்து, இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது.
- மைக்கேல்சாமி, காய்கறி வியாபாரி
காந்திபுரம் எட்டாம் நம்பர் மார்க்கெட்