/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வி.எச்.எஸ்., ஐயர் அறக்கட்டளை துவக்கம்
/
வி.எச்.எஸ்., ஐயர் அறக்கட்டளை துவக்கம்
ADDED : மார் 08, 2025 06:49 AM

கோவை; நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி பயின்றோர் கழகமும், கணிதவியல் துறையும் இணைந்து, ஸ்காட் பயின்றோர் கழகக் கருத்தரங்க கூடத்தில், வி.எச்.எஸ்.ஐயர் அறக்கட்டளை துவக்க விழா நடத்தின.
கோவையைச் சேர்ந்த பத்மா, தனது கணவர் வி.எச்.எஸ்., ஐயர் நினைவாக அறக்கட்டளையை துவக்கினார். கணிதத்துறைத் தலைவர் சந்திரகுமார் வரவேற்றார். பொறுப்பு முதல்வர் ஹென்றி ராஜா தலைமை வகித்தார். முன்னாள் கல்லுாரி முதல்வரும், பயின்றோர் கழக செயலருமான, ஜேம்ஸ் ஆர்.டேனியல் அறிமுகவுரை ஆற்றினார்.
வருவாய்த்துறையைச் சார்ந்த சுரேஷ் பாபு துவக்க உரையாற்றினார். திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கணிதவியல் துறைத்தலைவர் லட்சுமண கோமதி நாயகம், 'தெளிவற்ற கணிதம் மற்றும் அதன் பயன்பாடுகள்' என்ற தலைப்பில், சிறப்புரை ஆற்றினார். ராணி ராதாபாய் நன்றி கூறினார். பயின்றோர் கழகப் பொருளாளர் மோகன்தாஸ், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.