/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் நலச்சட்டம் மீறல்; 127 நிறுவனங்கள் மீது வழக்கு
/
தொழிலாளர் நலச்சட்டம் மீறல்; 127 நிறுவனங்கள் மீது வழக்கு
தொழிலாளர் நலச்சட்டம் மீறல்; 127 நிறுவனங்கள் மீது வழக்கு
தொழிலாளர் நலச்சட்டம் மீறல்; 127 நிறுவனங்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 10, 2024 11:37 PM
கோவை: தொழிலாளர் நலத்துறை சட்டங்களை மீறிய குற்றத்துக்காக, கோவையில், 127 நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் இணைந்து, பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
எடை குறைவு, முத்திரையிடாத, மறுமுத்திரையிடாத எடை அளவு வைத்திருத்தல், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது தொடர்பாக, 43 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதலாக விற்பனை செய்தல், விலைப்பட்டியல் தொடர்பாக, 5 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களை மீறிய குற்றங்களுக்காக, 127 நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு சான்று பெற வேண்டும். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச கூலி வழங்காத நிறுவனங்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
கடந்த ஜூன் மாதம் மேற்கொண்ட, 306 ஆய்வுகளில், 2 வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு, குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், ஒரு வழக்கு முடிக்கப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.