/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வ.உ.சி., சிலைக்கு காங்., மாலையிட்டு மரியாதை
/
வ.உ.சி., சிலைக்கு காங்., மாலையிட்டு மரியாதை
ADDED : செப் 07, 2024 02:02 AM

கோவை:கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.
அகில இந்திய காங்., செயலாளர், மயூரா ஜெயக்குமார், வ.உ.சி., பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி.,யின் தியாகம் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது துணிச்சலான போராட்டம் குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் சிவகுமார், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் போஸ், தமிழ்ச்செல்வன், குருசாமி, காந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.