/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்'
/
'தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்'
ADDED : ஜூன் 06, 2024 11:24 PM
மேட்டுப்பாளையம்:தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் குடிநீர் ஆதரங்களின் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக செல்கிறது. மழை காலம் என்பதால், தண்ணீரில் மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீரில் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு, சளி, காய்ச்சலும் வர வாய்ப்புள்ளது. தண்ணீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் தானாக மருந்துகளை உட்கொள்ள கூடாது. மருத்துவர்களின் பரிந்துரை மிகவும் அவசியம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவில் உள்ளன. மழை காலம் என்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. தண்ணீரை தேங்க விடக்கூடாது. வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் உள்ளனவா, என மக்கள் பார்க்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.--