/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொல்வது மட்டுமல்ல... நாங்க செய்தும் காட்டுவோம்! கட்டுக்கோப்புடன் செயல்பட்ட பா.ஜ., தொண்டர்கள்

ADDED : ஏப் 11, 2024 06:39 AM

கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களும் அவரை ஆதரித்து களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், ராமநாதபுரம், 80 அடி ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவரது வருகைக்கு முன்பு 'துாய்மை இந்தியா' மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து பா.ஜ., நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஜூஸ் பாக்கெட் வழங்கப்பட்டன. பிரசாரம் நிறைவில் பதாகைகள், தொப்பி, குடிநீர் பாட்டில்கள், டம்ளர் உள்ளிட்ட கழிவுகள், திருச்சி ரோட்டில் இருந்து பிரசாரம் நடந்த இடம் வரையிலான, 300 மீட்டர் துாரத்துக்கு கிடந்தன.
இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பா.ஜ., தொண்டர்கள் குழுக்களாக பிரிந்து கழிவுகளை சேகரித்து மறுநாள் காலை துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். துாய்மை இந்தியா திட்டத்தின் மகத்துவத்தையும், கட்சி தொண்டர்களின் கட்டுக்கோப்பையும் எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது.
இதர கட்சி கூட்டங்களின் நிறைவில் சரக்கு பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட், உணவு பொட்டலம் போன்றவை மைதானங்களிலும், ரோடுகளிலும் குவிந்து கிடப்பது முகம் சுழிக்க வைக்கும். அதை அப்புறப்படுத்துவது துாய்மை பணியாளர்களாகத்தான் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் பா.ஜ., தொண்டர்களின் கட்டுக்கோப்பையும், கடமை உணர்வை பார்த்து ஒலம்பஸ் பகுதி மக்கள் 'சபாஷ்' தெரிவித்ததுடன், மற்ற கட்சிகளும் இதை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.