/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொழிற்துறையினர் வரவேற்பு
/
கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொழிற்துறையினர் வரவேற்பு
கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொழிற்துறையினர் வரவேற்பு
கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொழிற்துறையினர் வரவேற்பு
ADDED : ஜூலை 02, 2024 02:34 AM
கருமத்தம்பட்டி;'கருமத்தம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்,' என்ற அறிவிப்பு சோமனூர் தொழிற்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள், சைசிங் மில்கள், விசைத்தறி குடோன்கள் உள்ளன. பல இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், தொழிற்சாலைகளில் ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால், 20 கி.மீ., தொலைவில் உள்ள சூலூர் அல்லது அன்னூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. அதேபோல், தோட்டத்து சாளைகளில் உள்ள கிணறுகளில் தவறி விழும் கால்நடைகள் மற்றும் மனிதர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் இருந்தால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படாது என்பதால், சுற்று வட்டார தொழிற்துறையினரும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. கருமத்தம்பட்டியில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்கப்படும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுளள்ளது. இது தொழிற்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.