/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய போட்டிகள்; அசத்திய பள்ளி மாணவர்கள்
/
மேற்கு குறுமைய போட்டிகள்; அசத்திய பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 20, 2024 10:18 PM

பொள்ளாச்சி : மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளிக்கல்வித் துறையின், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு குறு மைய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், மகாலிங்கம் இன்ஜி,. மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தன.
மேற்கு குறு மையத்துக்கு உட்பட்ட, 29 பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஹேண்ட்பால், கோ-கோ, கால்பந்து, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, வாலிபால், டெனிகாய்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
மாணவியர், கைப்பந்து, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 6 - 4 என்ற கோல் கணக்கில், முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வென்றது.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7 - 5 என்ற கோல் கணக்கில், முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வென்றது.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், விவேக் வித்யாலயா பள்ளி, 12 - 6 என்ற கோல்கணக்கில் சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வென்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை, முத்துசாமி கவுண்டர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி மேற்கொண்டது.