/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வில் வெற்றி அடைய தேவையானது என்னென்ன?
/
வாழ்வில் வெற்றி அடைய தேவையானது என்னென்ன?
ADDED : ஏப் 18, 2024 05:06 AM

கோவை : எஸ்.என்.எஸ்.,தொழில்நுட்ப கல்லுாரியின், 22வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜலட்சுமி, தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பெங்களூரு ஏ.பி.பி., நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு தலைவர் சுப்பா ராவ் பேசுகையில், ''மாணவர்கள் வாழ்வில் வெற்றியடைய பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் குணம் இருக்க வேண்டும்,'' என்றார்.
கவுரவ விருந்தினராக பங்கேற்ற, காக்னிசன்ட் கோவை இணை இயக்குனர் சுப்பா ராவ், ''எந்த ஒரு பணியை எடுத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார். தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், நடிகை அனிகா, எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், துணை முதன்மை கல்வியாளர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

