/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் பல கடைகளில் மிஸ்சிங்
/
புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் பல கடைகளில் மிஸ்சிங்
புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் பல கடைகளில் மிஸ்சிங்
புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் பல கடைகளில் மிஸ்சிங்
ADDED : ஜூன் 09, 2024 11:44 PM
பொள்ளாச்சி;நகரில், உணவு சார்ந்த ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கும் 'வாட்ஸ் அப்' எண் காட்சிப்படுத்தாமல் உள்ளது.
கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து, 94440-42322 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு தகவல் தெரிவிக்க, உணவுப் பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. பொள்ளாச்சியில், பெரும்பாலான ஓட்டல், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில், கலப்படம் குறித்த புகார் தெரிவிக்கும் வாட்ஸ்அப் எண், அறிவிப்பாக வைக்கப்படவில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது: நகரில், சில உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில், உணவுப் பொருட்களின் தரம் குறைவாகவே உள்ளது. நீண்ட நாள் ஒரே சமையல் எண்ணெய் பயன்பாடு, சுகாதாரமற்ற சமையலறை என, பல்வேறு பிரச்னைகள் நீள்கிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால், கடை உரிமையாளர்கள் முறையாக பதில் அளிக்காமல், எதிர்கேள்வியால் வாடிக்கையாளர்களை மிரட்டுகின்றனர். பெரும்பாலான கடைகளில், உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிக்கும் எண், காட்சிப்படுத்தாமல் உள்ளது.
புகார் தெரிவிக்கும் வாட்ஸ்அப் எண், கடைகளில் இருப்பதை, உணவு பாதுகாப்பு துறையினர் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

