/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்ப்பரேட் இறகுப்பந்து வெற்றி பெற்றவர்கள் யார்
/
கார்ப்பரேட் இறகுப்பந்து வெற்றி பெற்றவர்கள் யார்
ADDED : ஜூன் 26, 2024 10:52 PM
கோவை : காளப்பட்டியில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே, தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது.
ஈவன்ட்ஸ் பை ஸ்போர்பி சார்பில், கார்ப்பரேட் நிறுவனகள் இடையே தேசிய அளவிலான ஆண்கள் இரட்டையர் பிரிவு இறகுப்பந்து போட்டி, காளப்பட்டியில் உள்ள ஸ்போர்பி ஆக்டிவிட்டி சென்டரில் நடந்தது.
80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் இறுதிப்போட்டியில், தீபக் - சவுந்தர் ஜோடி 30 - 28 என்ற புள்ளிக்கணக்கில் மனோஜ், அருண் கார்த்திக் ஜோடியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை, இறகுப்பந்து உபகரணங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்போர்பி டெக்னாலஜிஸ் முதன்மை செயல் அதிகாரி முத்தையா தியாகராஜன் பரிசுகளை வழங்கினார்.